1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 23 ஏப்ரல் 2018 (12:20 IST)

தான் ஏமாந்த 30 லட்சத்தை திரும்பப்பெற இப்படி செய்தாரா நிர்மலா தேவி?

நிர்மலா தேவி தனது மகளுக்கு மருத்துவ சீட் பெற ரூ.30 லட்சம் கொடுத்து ஏமாந்ததால் தான் தவறான வழிக்கு சென்றாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர்.
 
விசாரனணையில் பேராசிரியை நிர்மலாதேவி தனது மகளுக்கு மருத்துவ சீட் பெற முயற்சித்து இதற்காக திருச்செங்கோடு பேராசிரியர் ஒருவரிடம் ரூ.30 லட்சம் கொடுத்து ஏமாந்து உள்ளதும் தெரிய வந்துள்ளது. அந்த பேராசிரியரை சந்திக்க நிர்மலாதேவி அருப்புக்கோட்டையில் இருந்து அடிக்கடி வாடகை காரில் சென்றுள்ளார். அந்த பேராசிரியரிடமும்,  கார் டிரைவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி தான் ஏமாற்றப்பட்ட பணத்தை எப்படியாவது திரும்ப பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்ல முயன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.