Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பட்ஜெட் கூட்டத்தொடரில் 4 அமைச்சர்கள் கலந்து கொள்ளாதது ஏன்? அணி மாறுகிறார்களா!!


sivalingam| Last Modified வெள்ளி, 17 மார்ச் 2017 (05:44 IST)
நேற்று தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் 2017-18அம் ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் சட்டசபைக்கு வந்திருந்த நிலையில் 4 அமைச்சர்கள் மட்டும் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.


 


வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் நால்வரும் ஓபிஎஸ் மாற உள்ளதாக ஒருசில வதந்திகள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த நான்கு அமைச்சர்களும் சசிகலா அணியினர் சார்பில் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க சென்ற குழுவுடன் சென்றுள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். நான்கு அமைச்சர்களும் டெல்லி சென்றார்களா? அல்லது தனித்து ஆலோசனை செய்தார்களா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்


இதில் மேலும் படிக்கவும் :