வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2023 (13:42 IST)

''இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்’' - அமைச்சர் உதயநிதி

இன்று, இந்தி தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘’ இந்தி திவஸ் நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள் கூறிக் கொள்கிறேன்….  நாட்டு மக்களை ஒன்றிணைப்பதில் இந்தி முக்கிய பங்கு வகிக்கிறது ‘’என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, தமிழக அமைச்சர் உதயநிதி தன் சமூக வலைதள பக்கத்தில்,

"இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து.

தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?

நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.