1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (16:15 IST)

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும்  ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி இன்று  தலைமை தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் இந்தியாவில் நடைபெறவுள்ளதால் இதை அனைத்துக் கட்சிகள் உள்ளிட்ட உலகத்தலைவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
 
இந்த நிலையில், இன்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
நாடு முழுவதும் வருகின்ற மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
 
இதில், ஆண் வாக்காளர்கள் -49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்காள் 47.1 கோடிப் பேரும், மூன்றாம் பாலினத்தவர் -48044 பேரும் உள்ளனர். 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைவிட  தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6 சதவீதம் அதிகம் உள்ளனர். வரும் மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 1.8 கோடி வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர். 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சபேர் வாக்களிக்க உள்ளனர். என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 18 வயது எட்டுபவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யலாம்; ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், குடிநீர், சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்தத் தேர்தல்  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்துள்ளது.
 
தமிழ் நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பு மனுதாக்கல் வரும் மார்ச் 20 ஆம்தேதி தொடங்கும் எனவும், மனு தாக்கலுக்கு கடைசி நாள்  மார்ச் 27 ஆம் தேதி எனவும், மனுக்கல் மீது பரிசீலனை மார்ச் 28 ஆம் தேதி எனவும் வேட்புமனு வாபஸ்பெற கடைசி எனாள் மார்ச் 30 என அறிவித்துள்ளது.
 
வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்   நடைபெறும், இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
எனவே 18 வது மக்களவை தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.