திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (19:52 IST)

பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலப்படமா? பரவி வரும் வதந்தியால் பரபரப்பு

ஒருசில குறிப்பிட்ட கடைகளில் தயாராகும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலப்படம் செய்வதாகவும் இதனால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களின் மக்கள் தொகையை குறைக்க சதி செய்திருப்பதாகவும் வாட்ஸ்அப்களில் வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திக்கு என்றுமே பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது இந்த வதந்திகள் உண்மையா பொய்யா என்பதை கூட அறியாமல் பலர் இதனை ஃபார்வேர்டு செய்வதால் சில சமயம் கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதமும் நடைபெற்று வருகிறது
 
சமீபத்தில் கூட சிஏஏ போராட்டத்தின்போது இயற்கையாக மரணம் அடைந்த ஒருவரை போராட்டத்தின் காரணமாக மரணமடைந்ததாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. அதேபோல் திமுக எம்பி செந்தில்குமார் அவர்கள் விபத்தில் இறந்த ஒருவரின் புகைப்படத்தை பதிவு செய்து சிஏஏ போராட்டத்தால் மரணமடைந்ததாக தவறாக பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப்பில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மக்கள்தொகை குறைப்பதற்காக ஒரு சில கடைகளில் விற்கப்படும் பிரியாணிகளில் கருத்தடை மாத்திரம் கலப்படம் செய்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க வதந்தி தான் என்றும் அப்படி எந்த கடையிலும் பிரியாணி தயாராக இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது