செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:34 IST)

ரூ.4 கோடி செலவில் இந்த ஆய்வகம் ஏன்? அமைச்சர் விளக்கம்!

தமிழ்நாட்டில் ரூ.4 கோடி செலவில் உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை கண்டறிய ஆய்வகம் அமைக்கப்பட்டது ஏன் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

 
உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை கண்டறிய சென்னையில் புதிய ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது இந்த புதிய ஆய்வகம். இந்தியாவில் கொரோனா வைரஸின் உருமாற்றத்தை கண்டறிய 11வது ஆய்வகமாக சென்னை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா சோதனை மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி அதன் உருமாற்றம் குறித்து ஆய்வு செய்ய ஒரு சோதனைக்கு ரூ.5000 செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டிலேயே இந்த ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு தற்போது அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.