வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (13:44 IST)

ரஜினி மீது ஆக்‌ஷன் எடுத்தீங்களா? ஆக்‌ஷனில் இறங்கிய ஐகோர்ட்!!

துக்ளக் விழாவில் சர்ச்சை பேச்சு பேசிய ரஜினி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் அந்நிகழ்வில் பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக திராவிடர் விடுதலைக் கழகம் ரஜினி மீது சென்னை மற்றும் கோவை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.  
 
இதனைத்தொடர்ந்து இந்த புகார்களை வழக்காக பதியக்கோரி மனு தொடரப்பட்டது. அதில், ரஜினி மீது நவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடவும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 
வழக்கை விசாரித்த நீதிபதி, புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்? புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும். இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடபட்டதே தவறு என கூறினார். 
 
இதனைத்தொடர்ந்து வேறு வழி இன்றி  திராவிடர் விடுதலைக் கழகம் ரஜினிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனுக்களை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் ரஜினி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என  சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.