செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 3 ஜூலை 2016 (15:41 IST)

சுவாதி படுகொலைக்கு முக்கிய காரணம் என்ன?

சுவாதி படுகொலைக்கு முக்கிய காரணம் என்ன?

இன்போசிஸ் பொறியாளர் சுவாதி படுகொலைக்கு முக்கிய காரணம் காதல் என தற்போது தெரிய வந்துள்ளது.
 

 
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இன்போசிஸ் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.
 
இதனையடுத்து, கொலையாளியை பிடிக்க பல்வேறு கோணங்களில் முயன்ற காவல்துறை, கடைசியில், நெல்லையில், கொலையாளி ராம்குமார் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவர் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
 
இதனயைடுத்து, ராம்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், அவரிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கினர். அதில் ராம்குமார் கூறுகையில், நான் ஒரு என்ஜினியரிங் பட்டதாரி என்றாலும் படிப்பை பாதியில் விட்டேன். இதனால், சென்னையில் ஜவுளிக்கடையில்  வேலை பார்த்து வந்தேன்.
 
அப்போது சுவாதியை காதலித்தேன். நான் ஜவுளிக்கடையில் வேலை செய்வது தெரிந்ததால், சுவாதி எனது காதலை மறுத்தார். மேலும், என்னை சந்திப்பதையே தவிர்த்தார். இதனால்தான் கோபம் கொண்டு அவரை கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.
 
சுவாதி படுகொலைக்கு காதலும், சமூக அந்தஸ்தும் தான் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.