வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 3 டிசம்பர் 2016 (19:08 IST)

பணமில்லாத ஏ.டி.எம்.களில் என்ன நடக்கிறது?

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், சாதாரண ஏழை, எளிய ஜனங்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு பெரிதும் சிரமப்பட்டனர்.

மேலும், நீண்ட வரிசையில் காத்திருந்தது, பணம் மாற்ற இயலாமல் தற்கொலை செய்துகொண்டது உள்ளிட்ட பல காரணங்களினால் நூற்றக்கும் மேற்பட்ட எளிய ஜனங்கள் உயிரிழந்தனர். பல ஏ.டி.எம்.களில் பணமே இல்லாத நிலை நீடித்தது.

இந்நிலையில் பணம் இல்லாத ஏ.டி.எம். இயந்திர மையங்கள் நடக்கும் சில வேடிக்கைகள் நிகழ்ந்தன. அவற்றுள் சமூக வலைத்தளங்களில் உலவிய சில.

மாடுகள் படுத்துறங்கும் ஏ.டி.எம். மையங்கள்..


அரிசி, மணி கொழுகட்டை, மிளகாய் பொடி தடவிய இட்லி நிலையமாக மாறிய ஏ.டி.எம். மையங்கள்...