ஆட்சி மாற்றம் வேண்டும்- நடிகை காயத்ரி ரகுராம்
அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இத்தேர்தலுக்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 2 முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தொடர்ச்சியாக தோல்வியுற்ற நிலையில், அடுத்த முறை ஜெயிக்க வேண்டி, திமுக, ஜனதா தளம், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
''எங்களுக்கு புதிய தலைமுறை வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும், நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தை சுயநலத்திற்காக இழிவுபடுத்தும் பா.ஜ.க நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு போலி சாமியார் வேஷம் வேண்டாம். வன்முறை, வெறுப்பு, பாலியல் துன்புறுத்தல், மோசடி, ஜனநாயகத்தை அபகரித்தல், இந்து மதத்தின் பெயரால் அரசியல் ஆகியவற்றை நாங்கள் விரும்பவில்லை. சுதந்திர போராட்ட வீரர்களான காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக சவாரி செய்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் பாஜகவின் பொய்களை நாங்கள் விரும்பவில்லை. பாதுகாப்பில் தோல்வியடைந்த பாஜக. பிஜேபியை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள்''என்று தெரிவித்து 1380 ரூபாய் நங்கொடை அளித்துள்ளார்.