நாங்கள் வலுவாக உள்ளோம்: தமிழிசை சவுந்தரராஜன்


K.N.Vadivel| Last Modified புதன், 20 ஜனவரி 2016 (04:37 IST)
தமிழக பாஜக வலுவான நிலையில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
 
சென்னையில், தமிழக பாஜக முன்னாள் பொறுப்பாளரும், சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் கவர்னருமான வி.ராமராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்திற்கு பின்பு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக பாஜக சட்ட மன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயராக உள்ளோம்.
 
சட்ட மன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டம் ஜனவரி 22 ஆம் தேதி கமலாலயத்தில் நைடபெற உள்ளது. இதில், தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.
 
சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து 2 வாரத்தில் விருப்ப மனு பெற உள்ளோம். பாஜக வேட்பாளர்கள்எம்எல்ஏவாக வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கு பெறும் அளவிற்கு நாங்கள் வலுவாக உள்ளோம் என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :