ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 மே 2019 (12:21 IST)

மெட்ரோ சுரங்கப்பாதையில் நீர்க்கசிவு – சிக்கலாகும் பயணம் !

சென்னை செண்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கத்தில் தண்ணீர் கசிவதால் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்குவதாகப் புகார் எழுந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முழுவதுமாக முடிந்து இப்போது ரயில் சேவை நடந்து வருகிறது. சில இடங்களில் மேம்பாலங்களிலும் அண்ணா சாலை மற்றும் செண்ட்ரல் போன்ற இடங்களில் சுரங்கப்பாதை வழியாகவும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவதாகவும் அந்த தண்ணீர் தண்டவாளங்களி தேங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் பயணம் அசௌகரியத்தை உண்டாக்குவதாக பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.