தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்

election
Last Modified சனி, 9 பிப்ரவரி 2019 (16:33 IST)
தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் கருவியுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு கரூரில் தொடக்கம்.

தேர்தலில் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் கருவியுடன் கூடிய வாக்கு பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் 6 வாகனத்தை கரூர் தேர்தல் கண்காணிப்பு அலுவலரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளருமான விஜயகுமார் தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தில் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் 150 வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பாதுகாப்புக்காக ஒவ்வொரு வாகனத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.ஆனந்தகுமார்

 


இதில் மேலும் படிக்கவும் :