1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (08:36 IST)

வேலூர் கோட்டையை பிடிக்க போவது யார்? வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

வேலூர் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது.

வேலூர் மக்களவைக்கான தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி மற்றும் 28 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி அதிமுக ஏ.சி.சண்முகம் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.