செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 1 மார்ச் 2021 (21:06 IST)

இலங்கையில் விவேகானந்தர் பிறந்தநாள்: காயத்ரிரகுராம் வெளியிட்ட வீடியோ!

இந்தியாவில் மட்டுமின்றி இலங்கையிலும் பாஜக தனது கட்சியை நிறுவ முயற்சி செய்து கொண்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இலங்கையில் விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ ஒன்றை நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 
 
இலங்கையிலும் இந்து எழுச்சி கிளம்பிவிட்டதகவும், இந்து நாடாக இலங்கை விரைவில் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
இலங்கை மேற்கு மாகாணம் கொழும்பு மாவட்டம் தெகியோவிற்றை கிரிவந்தலை (படம்)
சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா(காணொலி) இந்துவாக வாழ்வோம் என இளம் சிறார்களின் முழக்கம் மருத்துவர் செல்வா முன்னெடுக்க இலங்கையில் 18 மாவட்டங்களில் 95 தொண்டர்கள் 5000 சுவரொட்டிகளை ஒட்டி மதமாற்றத் தடைச் சட்டம் இலங்கையில் கொண்டுவர வேண்டுமென தத்தம் அயலில் வாழ்கின்ற பல்லின பல மத மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்