திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (10:45 IST)

தமிழக முதல்வருக்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு!

தமிழக முதல்வருக்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
ரஷ்யாவில் நடைபெற இருந்த செஸ் போட்டி சென்னைக்கு மாற்றப்பட்டது என்பதும் தமிழக அரசின் தீவிர முயற்சியால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையீல் இப்போட்டியின் நாயகனாக மாற்றியதற்கு முதலமைச்சருக்கு நன்றி என்று ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற விசுவநாதன் ஆனந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
மேலும் செஸ் போட்டிக்குரிய முக்கிய இடமாக சென்னை எப்போதும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது அனைவருக்கும் பெருமையான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்