வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 21 மார்ச் 2022 (16:35 IST)

ராஜராஜ சோழனுக்கு நாடாளுமன்றத்தில் சிலை: தமிழக எம்பி கோரிக்கை!

மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
தமிழகத்தைச் சேர்ந்த ஆரணியில் இருந்து மக்களவை எம்பியாக தேர்வு செய்தவர் விஷ்ணுபிரசாத். இவர் காங்கிரஸை சேர்ந்தவர் என்பதும் இவர் இன்று மக்களவையில் பேசிய போது தமிழ் மன்னன் ராஜராஜ சோழனுக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார் 
 
அதுமட்டுமின்றி மும்பை துறைமுகத்திற்கு இராஜராஜசோழன் பெயரை வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை ஏற்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்