1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (12:03 IST)

எனக்கு போட்டியிட தகுதி இருக்கிறது: சிம்புவின் கேள்விக்கு விஷால் பதிலடி

சிம்புவை போல் நானும் ஒரு உறுப்பினர். எனவே எனக்கு தேர்தலில் போட்டியிட தகுதி இருக்கிறது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்ட சேலம் சென்ற விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


 

நடிகர் சங்கத்தின் நன்மைக்காகவே இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். தேர்தலை கைவிட வேண்டும் என்றால் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நடிகர் சங்கத்தை காப்பாற்றுவதற்காகவே தேர்தலை சந்திக்கிறோம். நடிகர் சங்க தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

விஷால், கார்த்திக்கு சங்கம் நடத்த தெரியுமா? என்று கூறுகிறார்கள். நாங்களும்  எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறோம். 3 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் கேட்கும் கேள்விக்கு நடிகர் சங்கத்தில் இருந்து இதுவரை பதில் இல்லை. இதற்கு ஆதாரமாக என்னிடம் 45-க்கும் மேற்பட்ட கடிதங்கள் இருக்கின்றன.

தேர்தல் என்றாலே 2 அணிகள்தான் நிற்கும். இதை பிளவு என்று கூற முடியாது. எனது தனிப்பட்ட பிரச்சினைக்காக தேர்தலில் போட்டியிடவில்லை. சிம்புவை போல் நானும் ஒரு உறுப்பினர். எனவே எனக்கு தேர்தலில் போட்டியிட தகுதி இருக்கிறது என்று கூறினார்.