1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (14:38 IST)

’முதலமைச்சரே அழைத்தாலும் சமரசம் இல்லை’ - விஷாலின் பேச்சால் சர்ச்சை

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, முதலமைச்சரே பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும் சமரசத்திற்கு இடம் கிடையாது என்று கூறியதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

 
வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் நடைபெறவுள்ளது.
 
இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நடிகர் நாசர் தலைமையிலான அணியும் களம் காண உள்ளன. நாசர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், துணைத் தலைவர் பதவிகளுக்கு பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
 
அதேபோல, சரத்குமார் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர் பதவிகளுக்கு விஜயகுமார், சிம்பு மற்றும் பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடத்தில் கூறிய விஷால், ”முதலமைச்சரே பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும் சமரசத்திற்கு இடம் கிடையாது” என்று கூறியிருந்ததாக சர்ச்சை கிளம்பியது.
 
ஆனால், உடனே இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், “நான் நமது மரியாதைக்குரிய முதலமைச்சரை மதிக்கிறேன். மேலும், நான் எனது பக்கத்தில் சரியாக இருக்கிறேன்.
 
நான் ஒரு போதும் அவ்வாறு சொல்லவில்லை. மரியாதைக்குரிய முதலமைச்சரின் வார்த்தைகளுக்கு மதிக்காதபடி எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த கருத்து சரியானது கிடையாது” என்று கூறியுள்ளார்.