1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (08:35 IST)

விருத்தீஸ்வரர் கோவில் கலசங்கள் கண்டுபிடிப்பு: ஒருவர் கைது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருத்தாச்சலம் அருகே உள்ள விருத்தீஸ்வரர் கோயிலில் மூன்று கோபுர கலசங்கள் திருடப்பட்ட நிலையில் அந்த கலசங்கள் தற்போது போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருதீஸ்வரர் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் திடீரென அந்த கோவிலில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கோபுர கலசங்கள் திருடு போயின
 
இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் உதவியால் கோபுர கலசங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
 
விருத்தாச்சலம் பெரியார் நகர் அமுதம் தெருவில் அந்த கலசங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் இதுதொடர்பாக சந்தோஷ் குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன