Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோனியே எப்போதும் என் கேப்டன் - விராட் கோலி நெகிழ்ச்சி


Murugan| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (15:45 IST)
ஒருநாள் போட்டி மற்றும் டி20 ஆகிய போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  தோனி  சமீபத்தில் அறிவித்தார்.

 

 
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தர் மகேந்திர சிங் தோனி. இவர் 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து திடீரெனெ விலகினார். அதன் பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக பதவி வகித்து வந்தார். 
 
சமீபகாலமாக அவர் சிறப்பாக விளையாடுவதை பார்க்க முடியவில்லை. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கில்லாடியாக திகழ்ந்த அவர், கடந்த சில ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை. மறுபக்கம், டெஸ்ட் போட்டிகளுக்கான விராட் கோலியின் எழுச்சி அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.  
 
விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து, நம்பர் ஒன் இடத்தையும் பெற்றது. எனவே விராட் கோலியிடமே ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியையும் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 
 
இதனால் தீவிர ஆலோசனையில் இருந்த தோனி, தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக, சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தார்.  ஒரு வீரராக இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவேன் என அவர் கூறியிருந்தார். எப்படியும் டெஸ்ட் போட்டி கேப்டன் விராட் கோலிதான் தோனிக்கு பதில் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.


 

 
இந்நிலையில் விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்த தோனிக்கு என்னுடைய நன்றி. அவரே எப்போதும் என்னுடைய கேப்டன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :