வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2023 (08:42 IST)

திருவிழாவை நிறுத்த சதி; பாயாசத்தில் விஷம்!? – தர்மபுரியில் பரபரப்பு!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள கோவிலின் கும்பாபிஷேக விழாவில் பாயாசத்தில் விஷம் கலந்து சிலர் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள வேப்பமரத்தூர் கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. பல காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த அந்த கோவில் 13 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு விழா ஏற்பாடுகள் நடந்தது.

இந்நிலையில் இந்த கும்பாபிஷேக விழாவை தடுத்து நிறுத்த மர்ம நபர்கள் சிலர் சதி செய்வதாக கிராம மக்கள் இடையே கும்பாபிஷேக விழாவை நடத்துவது குறித்த கருத்து முரண்பாடுகள் எழுந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த கிராம மக்கள் 7 பேர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக செய்து வைத்திருந்த பாயாசத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர். உடனடியாக அவர்களை மற்ற மக்கள் மருத்துவமனையில் கொண்டு சேர்த்த நிலையில் அவர்களுக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K