வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (16:46 IST)

விஜயகாந்த் உடல் நிலை சீராக உள்ளது...தேமுதிக 3 வது அணி அமைக்கும் ? - விஜய பிரபாகரன்

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத்தேர்தல்  மூன்று கட்டமாக  நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அத்துனை கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

அதிலும் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுகவில்  முதல்வர் வேட்பாளர்கள் உறுதிசெய்யப்பட்டுவிட்டதால் கூட்டணி கட்சிகளுடன் மட்டுமே தொகுதிப் பங்கீட்டுக்காகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதிருக்கும்  என்ற நிலையில், தற்போது  அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரகாரன் தேமுதிக நினைத்தால் 3 வது அணி அமைக்கும் என்று  தெரிவித்துள்ளார்.

இன்று மதுரை மாவட்டம் காளவாசல் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தேமுதிக கட்சி நிர்வாகி இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட விஜய்காந்தின் இளையமகன் விஜய பிரகாரன், நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

விஜயகாந்துக்கும் உடல் நிலை சீராக உள்ளது, அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை; அவருக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை அவரைக் குணப்படுத்திய மருத்துவர்களுக்கு நன்றி எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்று தேமுதிக என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளோம். எனவே வரும் தேர்தலில் தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்புள்ளது, இத்தேர்தலில் விஜயகாந்த் பிரசாராத்தில் ஈடுபடுவார்  எனத்  தெரிவித்துள்ளார்.