1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2016 (16:31 IST)

ஆசைப்படலாம்; ஆனால் பேராசைப் படக்கூடாது : விஜயகாந்த் அதிரடி

மனிதர்கள் ஆசைப்படலாம், ஆனால் பேராசை படக்கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்தார்.


 

 
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில்,விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:
 
இஸ்லாமியர்கள் பசியை உணருவதற்காக உடலை வருத்தி நோன்பு இருப்பதே இஃப்தார் ஆகும். அதேபோல், எல்லோருக்கும் அன்போடு கொடுத்து உதவ வேண்டும் என குர்ஆன் கூறுகிறது. அதன் அடிப்படையில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
 
நான் நபிகள் நாயகம் பற்றி புத்தகத்தில் படித்திருக்கிறேன். அதில் ஒரு நிகழ்ச்சி எனக்கு ஞாபகம் வருகிறது. அதவது ஒருவர் அல்லாவை நினைத்து வேண்டியுள்ளார். அப்போது, அல்லா நேரில் தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் உலகத்திலேயே பெரிய பணக்காரனாக வேண்டும் என்று கூறியுள்ளார்.. அதற்கு அல்லா,  நீ எங்கு வரை ஓடுகிறாயோ அந்த இடம் அனைத்தும் உனது ராஜ்ஜியம் ஆகும் என்றார். அதனால் தொடர்ந்து பசியோடு ஓடி, மயானத்தையும் கடந்து ஓடினாராம். இதில் என்ன தெரிகிறது என்றால் ஆசைப்படலாம், ஆனால் பேராசை கூடாது என்பதை உணர்த்துகிறது. இதிலிருந்து உங்களுக்குத் தேவையானது எது என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்” என்று விஜயகாந்த் பேசினார்.