1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (18:00 IST)

விஜயகாந்த் தனது முடிவை மாற்ற கூடாது: ஓபிஎஸ்

மக்களவை தேர்தலில் தனித்து போடியிட முடிவு செய்த விஜயகாந்த் தனது முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 
தேமுதிக மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
 
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்துல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:_
 
மக்களவை தேர்தலில் தனித்து மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து விஜயகாந்த் பின்வாங்காமல் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேலியாக கூறியுள்ளார்.
 
மேலும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்றார்.