வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 28 மே 2016 (12:06 IST)

கட்சி மாற வேண்டாம்; பணம் தருகிறேன்: கெஞ்சும் விஜயகாந்த்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 104 இடங்களில் போட்டியிட்ட விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வியடைந்தது.


 
 
அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தே டெபாசிட்டை இழந்தார். தேர்தலில் அடைந்த படுதோல்வியில் இருந்து கட்சி மீளமுடியாத நிலையில். சொத்துக்களையும், நகைகளையும் அடகு வைத்து தேர்தலை சந்தித்த தேமுதிக வேட்பாளர்கள் தற்போது அனைத்தையும் இழந்து விரக்தியில் உள்ளனர்.
 
இந்நிலையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தோல்வியடைந்த வேட்பாளர்களை சந்தித்து வரும் விஜயகாந்த் அவர்களின் தோல்விக்கான காரணங்களை கேட்டு வருகிறார்.
 
தோல்விக்கான காரணமாக அவர்கள் வைக்கும் முதன்மை காரணம் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்திருக்க கூடாது என்பதாகும். மேலும் இந்த தேர்தலில் போட்டியிட தாங்கள் நகைகளை எல்லாம் அடுகு வைத்து, தற்போது அனைத்தையும் இழந்து நிற்பதாக புலம்பி உள்ளனர்.
 
இதனையடுத்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு பண உதவி செய்யப்படும் என விஜயகாந்த் கூறியதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வரும் ஜூன் 5-க்குள் தாங்கள் செலவு செய்த பணம் திருப்பி வழங்கப்படும் எனவும், அதற்காக யாரும் வேறு கட்சிக்கு செல்ல வேண்டாம். இதே கட்சியில் தொடர்ந்து இருங்கள் என விஜயகாந்த் உருக்கமாக கேட்டுக்கொண்டதாக கூறுகின்றனர்.