வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (16:06 IST)

விஜயகாந்துக்கு தகுதி இல்லை : நடிகர் சிங்கமுத்து விளாசல்

முதலமைச்சராகும் தகுதி தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கிடையாது என்று அதிமுக பிரச்சார பேச்சாளர் சிங்கமுத்து கூறியுள்ளார்.


 

 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கரூர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் சிங்கமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
 
அவர் பேசும் போது “சென்னை மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு சந்தோஷமாக தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மக்களிடம் ஒட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
 
விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்று யாருக்கும் புரியவில்லை. அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியாது. முதலமைச்சராகும் தகுதி அவருக்கு இல்லை. அவரை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மதுவிலக்கு பற்றி பேசுவதற்கு என்ன அவருக்கு தகுதி இருக்கிறது.
 
அனேகமாக அவர் இந்த தேர்தலோடு ஓடி விடுவார். வைகோ பேசி பேசி பல் தேஞ்சதுதான் மிச்சம். அவரால் ஒன்றும் சாதிக்க முடியாது. திமுக ஏற்கனவே முடிந்து போன கதை. முதல் அமைச்சர் ஜெயலலிதா பெண்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். அதனால்தான் அவர்களுக்கு தாலிக்கு தங்கம், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய இலவசங்களை கொடுத்தார். இந்த முறையும் அதிமுக வெற்றி பெற்று அம்மாவே அடுத்த முதலமைச்சர் ஆவார்” என்று கூறினார்.