வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 28 நவம்பர் 2015 (15:01 IST)

இளங்கோவனை தலைவர் பதவியில் இருந்து நீக்க கோரி சோனியாவுக்கு விஜயதாரணி கடிதம்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கக் கோரி சோனியா காந்திக்கு விஜயதாரணி கடிதம் எழுதியுள்ளார்.
 

 
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் இளங்கோவனை மாற்றக் கோரி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், குமரி அனந்தன், வசந்தகுமார், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட பலரும் கங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினர்.
 
இந்நிலையில், சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் மாநில தலைவர் இளங்கோவன் படத்துடன் விஜயதாரணி படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து, அந்த பேனரில் இருந்த விஜய தாரணியின் படம் கிழிக்கப்பட்டது. பேனரையும் அவிழ்த்து விட்டனர். இதனால் விஜயதாரணியின் ஆதரவாளர்கள் கோபம் அடைந்தனர்.
 
இதற்கிடையில், இது குறித்து விஜயதாரணி பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளங்கோவனிடம் முறையிட்டுள்ளார். விஜயதாரணியை இளங்கோவன் சமாதானப்படுத்தி இருக்கிறார்.
 
ஆனாலும் விஜயதாரணி இளங்கோவனிடம் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், பொறுமையிழந்த இளங்கோவன் அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.
 
இந்நிலையில், விஜயதாரணி, இளங்கோவன் பெண் நிர்வாகிகளை மதிப்பதில்லை என்றும் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.