வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (16:10 IST)

ரஜினி - கமல் கூட்டணியா?? கலாய்த்து விட்ட கேப்டன் மகன்!!

ரஜினியும், கமலும் தனித்தோ இணைந்தோ நடிகர் சங்க தேர்தலை கூட எதிர்கொண்டது இல்லை என விஜய பிரபாகன் விமர்சித்துள்ளார். 
 
தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்பது இல்லை. பேச்சுவார்த்தையில் எப்படி உடன்பாடு எட்டப்படுகிறதோ அதை பொறுத்து கூட்டணி அமையும். ரஜினியுடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்த  வாய்ப்பு இருக்கிறது என கமல் தெரிவித்துள்ளார்.  
 
ரஜினி, கமல் இருவரும் அரசியலில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகன். சென்னை மணப்பாக்கத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு பின் அவர் பேசியதாவது, 
 
ரஜினியும், கமலும் தனித்தோ இணைந்தோ நடிகர் சங்க தேர்தலை கூட எதிர்கொண்டது இல்லை. அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் இணைந்து செயல்படப் போவதாக கூறுவது கேள்விக்குறியாக உள்ளது என பேசியுள்ளார்.