வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (18:28 IST)

வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ட்விட்..!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய் இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவர் தனக்கு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்பதை தெளிவாக ஏற்கனவே கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நாளை எழுத உள்ள என் அருமை தம்பி தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
ஏற்கனவே விஜய் கடந்த மார்ச் 1ஆ, தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார். அதேபோல் நாளை பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran