1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 13 மார்ச் 2019 (14:18 IST)

பொள்ளாச்சி சம்பவத்தை பற்றி ட்வீட் செய்த விஜய் டிவி.! கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவிகள் என 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காமக்கொடூரன்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன.


 
பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) மற்றும் தாக்குதல் (354 பி) ஆகியவற்றுடன் சேர்த்து ஐபிசி பிரிவின் கீழ் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2000 ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகளிலும் , பெண்களின் மனிதாபிமான சட்டத்தின் தமிழ்நாடு தடைவிதிப்புகளிலும் அவை பதிவு செய்யப்பட்டன. 
 
இந்நிலையில் இந்த இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துவரும் வேளையில்  பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி நேற்று இந்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவிக்கும் விதத்தில் " மனசு வலிக்குது" என்று கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.