திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (13:05 IST)

கபசுரக்குடிநீரோடு களம் இறங்கிய விஜய் சேதுபதி ரசிகர்கள்! – மக்கள் ஆதரவு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் கபசுரக்குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் ஒரு சில மருந்துகள் மட்டும் ஓரளவு பாதிப்பிலிருந்து மீள உதவுவதாக மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் நிலவேம்பு கசாயம், கபசுரக்குடிநீர் உள்ளிட்டவற்றை பருகி வருகின்றனர். சில தன்னார்வலர்கள் இந்த கபசுரக்குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தாம்பரம் மற்றும் சிட்லபாக்கம் பகுதியில் உள்ள விஜய் சேதுபதி ரசிகர்கள் சாலைகளில் சுத்தம் செய்யும் பணியில் உள்ள சுகாதார பணியாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கியுள்ளனர். இளைஞர்களின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் கிடைத்துள்ளது.