வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 பிப்ரவரி 2025 (14:51 IST)

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை  தலைவர்களில் ஒருவருக்கு இன்று நினைவு நாளை அடுத்து, விஜய் மாலை மரியாதை செய்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், விக்கிரவாண்டி பகுதியில் நடந்த மாநாட்டில் கொள்கை தலைவர்கள் என சிலரை அறிவித்தார். பெரியார், காமராஜர், வேலுநாச்சியார் ஆகியோர்களுடன் அஞ்சலை அம்மாள் என்பவரையும் அவர் தனது கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவராக அறிவித்தார்.
 
அந்த வகையில், சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Siva