திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (13:39 IST)

ஆடியோ லாஞ்ச் இல்லைன்னா என்ன, ஆட்சியை பிடிச்சிட்டா போச்சு.. விஜய் ரசிகர்களின் போஸ்டர்..!

ஆடியோ லாஞ்ச் இல்லையென்றால் என்ன, ஆட்சியைப் பிடித்து விட்டால் போச்சி என செங்கல்பட்டு மாவட்ட விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு அரசியல் பின்னணி தான் காரணம் என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் திமுகவுக்கு எதிரான ஹேஷ்டேக்கையும் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கினர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் விஜய் ரசிகர்கள் ஆடியோ லான்ச் இல்லை என்றால் என்ன, ஆட்சியை பிடிச்சிட்டா போச்சு, என்ன நண்பா என்ற போஸ்டரை ஒட்டி உள்ளனர் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran