1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 மே 2021 (21:48 IST)

மருத்துவர்கள், நர்ஸ்களுக்கு தங்க நாணயம் தந்து ஊக்குவித்த விஜய் ரசிகர்கள்!

மருத்துவர்கள், நர்ஸ்களுக்கு தங்க நாணயம் தந்து ஊக்குவித்த விஜய் ரசிகர்கள்!
மருத்துவர்கள் நர்ஸ்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்க நாணயங்களை பரிசாக கொடுத்து அவர்களை ஊக்குவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
புதுக்கோட்டை மாவட்ட விஜய் ரசிகர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரை காப்பாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்ட மருத்துவ துறையினருக்கு மரியாதை செய்ய முடிவு செய்தனர்
 
இதனை அடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்க நாணயங்களை ஏற்பாடு செய்து மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் விஜய் ரசிகர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது