செவ்வாய், 8 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 மார்ச் 2025 (18:21 IST)

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று இப்தார் நோன்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை, தொப்பியுடன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
சென்னையின் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்றைய இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா நேரில் பார்த்து அமைத்திருந்தனர்.
 
இந்த விழாவில் 2000 பேர் உணவருந்தும் வகையில் மட்டன் பிரியாணி, நோன்பு கஞ்சி உள்ளிட்ட உணவுகள் தயார் செய்யப்பட்டன. தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் உட்பட 1500-க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிகழ்வில் விஜய் கலந்து கொண்டபோது, அவர் வழக்கமான உடையிலிருந்து மாறி, இப்தார் நோன்புக்கேற்ப வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை, தொப்பியுடன் வந்தார். இதனைக் காணும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran