மாப்பிள்ளை உங்களுக்கு ஹெலிகாப்டரில் வரனுமா? கலாய்த்து தள்ளும் வீடியோ!: வயிறு குலுங்க சிரிக்கலாம்!

மாப்பிள்ளை உங்களுக்கு ஹெலிகாப்டரில் வரனுமா? கலாய்த்து தள்ளும் வீடியோ!: வயிறு குலுங்க சிரிக்கலாம்!


Caston| Last Modified ஞாயிறு, 26 மார்ச் 2017 (14:44 IST)
சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் திருமணமாக போகும் மகள்கள் மற்றும் அவர்களுடைய அம்மாக்கள் விவாதம் செய்யும் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது தற்போது தமிழகம் முழுவதும் விவாதப்பொருளாகி விட்டது.

 
 
இந்த நிகழ்ச்சியில் பெண்கள் தங்களை திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை எப்படி வர வேண்டும், வீட்டில் என்னவெல்லாம் தங்கள் திருமணத்துக்கு செய்ய வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகளை கொட்டித்தீர்த்தது தான் மிச்சம், இவர்களை நெட்டுசன்கள் திட்டி தீர்க்கிறார்கள்.

 

 
 
வழக்கம் போல மீம்ஸ் கிரியேட்டர்களும் இதனை வச்சு செய்கிறார்கள். அதிலும் முக்கியமாக ஒரு பெண் தன்னை திருமணம் செய்ய வரும் மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்து இறங்கினால் நல்லா இருக்கும் என கூறியதை அதிகமாக கலாய்த்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இது தொடர்பாக கலாய்த்து ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு பார்த்து வயிறு குலுங்க சிரியுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :