வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (10:25 IST)

சட்டப்பிரிவு 356, தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு?: வெங்கையா நாயுடுவின் பதில்!

சட்டப்பிரிவு 356, தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு?: வெங்கையா நாயுடுவின் பதில்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு என்ற தகவல் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தன.


 
 
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கிய பின்னர் ஆட்சி கலைப்பு விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. எந்த நேரத்திலும் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படும் என்ற பதற்றம் நீடித்து வந்தது. ஆனால் அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு செயல்பட தொடங்கியது.
 
ஆட்சி கலைப்பு தகவல் தற்காலிகமாக நின்றது. ஆனால் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு பின்னர் நிச்சயம் ஆட்சி கலைப்பு இருக்கும் என பலரும் கூறிவருகின்றனர். குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.
 
ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் இதனை மறுக்கின்றனர். இந்நிலையில் நேற்று சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின், தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படாது என்றார்.
 
மேலும் எந்த காலத்திலும் மத்திய பாஜக அரசு, தவறான முறையில் 356 சட்டப்பிரிவைப் பயன்படுத்தாது. யார் முதல்வராக இருக்க வேண்டும் என்பதை தமிழகத்தில் ஆளும்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.