வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (10:28 IST)

விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கும் வேல்முருகன்! – அரசியல் பயணம் ஆரம்பமா?

விஜய்க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு
நடிகர் விஜய்க்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சி செயல்படும் என அதன் தலைவர் வேல்முருகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் விஜய் படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்துவரப்பட்டார். இந்த சம்பவம் பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எல்லா பிரச்சினைகளும் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தளம் சென்றார் விஜய். அவருடைய மாஸ்டர் படப்பிடிப்பு நடந்த நெய்வேலி சுரங்கத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியது.

விஜய்யை செயல்பட விடாமல் பாஜக தடுப்பதாக அமீர் உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்நிலையில் தமிழகம் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்துள்ளது. அதற்கு பிறகு பேசிய வேல்முருகன் கட்சியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது வருமானவரித்துறையினர் ரஜினிக்கு ஒரு நியாயம், விஜய்க்கு ஒரி நியாயம் என்று செயல்படுவதாகவும், இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சி இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சில அரசியல் கட்சிகள் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசி வரும் நிலையில் இது விஜய்யின் அரசியல் பயணத்துக்கான தொடக்கமாக அமையுமா என அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது.