1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2016 (13:11 IST)

வர்தா புயல்: அய்யய்யோ ஜெயலலிதா சமாதி என்ன ஆச்சு!

வர்தா புயல்: அய்யய்யோ ஜெயலலிதா சமாதி என்ன ஆச்சு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அடுத்த நாள் மாலையே அவரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்கள். அன்றே அவருக்கு மேற்கூறையுடன் சமாதி வைக்கப்பட்டது. இதனை தினமும் ஆயிரக்கனக்கான மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.


 
 
சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் ஜெயலலிதாவுக்கும் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு ஜெயலலிதா சமாதிக்கு மேற்கூறை அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையை அதிதீவிர வர்தா புயல் தாக்கியது. இதில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் தூக்கி வீசப்பட்டன. பல வருடங்களாக கம்பீரமாக நின்ற மரங்கள் கூட வேரோடு சாய்ந்து வர்தா புயலுக்கு இறையாகின.
 
ரயில் நிலைய கூரைகள் கடைகள் நிலைகுலைந்து தூக்கி வீசப்பட்டன. இதனையடுத்து மேற்கூறையுடன் கூடிய ஜெயலலிதா சமாதிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் அதிமுகவினருக்கு ஏற்பட்டது. ஆனால் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு ஒன்றும் ஆகவில்லை.
 
ஜெயலலிதாவை போல அவரது சமாதிக்கு போடப்பட்டுள்ள மேற்கூறையும் கம்பீரமாக நிற்கிறது. பாதுகாப்பு காவலர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்குள் தண்ணீர் புகாதபடி சுற்றிலும் மணல் மூட்டைகளை தடையாக வைத்துள்ளனர்.