கனமழையால் கன்னாபின்னாவென உயர்ந்த வர மிளகாய் விலை! – சென்னை மக்கள் கண்ணீர்!
ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் வர மிளகாய் வரத்து குறைந்துள்ள நிலையில் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வர மிளகாய் எனப்படும் சிவப்பு மிளகாய் ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து அதிகமாக தமிழகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக வர மிளகாய் வரத்து குறைந்துள்ளது.
இதனால் சென்னையில் வர மிளகாய் விலை அதிகரிக்க தொடங்கியது. கடந்த சில நாட்களில் வர மிளகாய் விலை எக்கச்சக்கமாக விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மாதம் ரூ.180க்கு விற்பனையாகி வந்த வர மிளகாய் தற்போது வேகமாக விலை உயர்ந்து ரூ.320 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சமையல் பொருட்களில் அவசியமான ஒன்றான வர மிளகாய் விலை அதிகரித்துள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், வரும் வாரங்களில் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.