விபச்சார வழக்கில் நடிகை சங்கீதா கைது - வாணி ராணி ரசிகர்கள் அதிர்ச்சி

Last Modified சனி, 2 ஜூன் 2018 (10:58 IST)
இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்தில் சீரியல் நடிகை சங்கீதா கைது செய்யப்பட்ட விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சில சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
 
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்து வரும் நடிகை சங்கீதா அவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு உதவியாக செயல்பட்ட சுரேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டார். 
 
கைது செய்யப்பட்ட நடிகை சங்கீதா வாணி ராணி சீரியலில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சின்னத்திரையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :