1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (12:31 IST)

மீண்டும் தமிழக பாஜகவுக்கு பெண் தலைவர்! யார் தெரியுமா?

தற்போதைய தமிழக பாஜகவின் தலைவராக தமிழிசை செளந்திரராஜன் இருந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு பெண் தலைவரே தமிழக பாஜகவுக்கு தலைமையேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
மக்களவை தேர்தலில் படுதோல்வி, பாஜகவுக்கு எதிராக விமான நிலையத்தில் தமிழிசையின் மகனே கோஷம் எழுப்பியது உள்பட பல அதிருப்திகள் தமிழிசை மீது உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக பதவியேற்ற தமிழிசை இந்த ஐந்து ஆண்டுகளில் கட்சியை வளர்க்கவே இல்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. 
 
இந்த நிலையில் விரைவில் தமிழக பாஜகவுக்கு ஒரு புதிய தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளதாக பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. குறிப்பாக வானதி ஸ்ரீனிவாசனுக்கு இந்த பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட வானதி சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு கொடுப்பதற்கு பதிலாக சிபி ராதாகிருஷ்ணனுக்கு சீட் கிடைத்தது. இதனால் அதிருப்தியில் இருந்த வானதியை சரிக்கட்டும் வகையில் அவருக்கு பாஜக தமிழக தலைவர் பதவி கொடுக்க மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இருப்பினும் பாஜக தலைவர் பதவிக்கான ரேஸில் கருப்பு முருகானந்தம், மதுரை பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது