செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 9 ஜனவரி 2023 (18:36 IST)

தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் என்று பெயரை மாற்ற தயாரா?வானதி சீனிவாசன்

vanathi
தமிழ்நாடு என்ற சொல் தான் தங்களுக்கு பிடித்த சொல் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரை தமிழ் நாடு முன்னேற்ற கழகம் என்று பெயர் மாற்ற தயாரா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சட்டசபையில் இன்று தமிழ்நாடு என்ற வார்த்தைகளை ஆளுநர் படிக்கவில்லை என அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் கவர்னருக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசியுள்ளார். 
 
தமிழ்நாடு என்பது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுகவினருக்கு விருப்பமானது என்றால் கட்சி பெயரை தமிழ் நாடு முன்னேற்ற கழகம் என்று மாற்ற தயாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
மேலும் திராவிட மாடல் என்பதை தமிழ்நாடு மாடல் என்றும் சொல்ல தயாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கேள்விக்கு திமுகவினர் என்ன பதில் சொல்லப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva