1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 20 செப்டம்பர் 2021 (08:39 IST)

22 மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் வைரமுத்து நூல்!

கவியரசு வைரமுத்து எழுதிய நூலொன்று 22 மொழிகளில் மொழிபெயர்க்க வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
கவியரசு வைரமுத்து எழுதிய நூல்களில் ஒன்று கள்ளிக்காட்டு இதிகாசம். இந்த நூல் தமிழில் எழுதப்பட்டது என்பதும் இந்த நூல் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூல் தற்போது 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு நூல் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து கவியரசு வைரமுத்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.