செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 மே 2021 (15:32 IST)

சீன பிடியில் இலங்கை துறைமுகம்: வைகோ எச்சரிக்கை!

சீனாவின் பிடியில் இலங்கை துறைமுகம் வந்ததால் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் ஆபத்து என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
இலங்கையைச் சேர்ந்த அம்பன்தோட்டா என்ற துறைமுகத்தை சீனா தன் வசப்படுத்திக் கொண்டு இருக்கிறது என்பதும் அந்த துறைமுகத்தை சீனா 11.20 லட்சம் டாலருக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சீனாவிடம் இலங்கை வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் இந்த துறைமுகத்தை குத்தகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த துறைமுகத்தை சீனா பெற்றதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்றும் இதனால் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு மிகப்பெரிய கேடாகிவிடும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார் 
 
சீனாவின் ஆதிக்கம் குறித்து மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்