1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (11:46 IST)

வைகோ மீது மது பாட்டில் வீச்சு: பெரும் பரபரப்பு

வைகோ மீது மர்ம நபர்கள் சிலர் மதுபாட்டிலை வீசியுள்ளனர். அந்த பாட்டில் குறிதவறி வைகோவின் மீது படாமல் அவரது வாகனத்திற்கு பின்னால் இருந்த  வாகனத்தின் மீது விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
குளத்தூர் என்ற பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாகனத்தில் இருந்து கொண்டே காவிரி பிரச்சனை குறித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் நின்றிருந்த வாகனத்திற்கு பின்னால் இருந்த வாகனத்தின் மீது மதுபாட்டில் ஒன்று விழுந்து நொறுங்கியது. வைகோவின் வாகனம் மீது வீசப்பட்ட இந்த மதுபாட்டில் குறிதவறி பின்னால் இருந்த வாகனத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த மதுபாட்டிலை அங்கிருந்த வீடு ஒன்றின் மாடியில் இருந்து மர்ம நபர்கள் சிலர் வீசியுள்ளனர். இதனையடுத்து போலீசார் விரைந்து அந்த வீட்டின் மாடிக்கு சென்று அங்கிருந்தவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.