1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 22 பிப்ரவரி 2021 (18:27 IST)

புதுச்சேரியில் நடந்தது ஜனநாயக படுகொலை: வைகோ ஆவேசம்

புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு திடீரென இன்று காலை கவிழ்ந்ததை அடுத்து புதுவை முதல்வர் நாராயணசாமி தனது அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்துள்ளார். இதனை அடுத்து தமிழிசை சவுந்தரராஜன் அடுத்த கட்ட நடவடிக்கையை விரைந்து எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் புதுவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்தே இந்த அரசு கவிழ்ந்துள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் பாஜகவையே குற்றம் கூறி வருகின்றனர். பாஜகவினால் தான் புதுவை அரசு கவிழ்ந்ததாக கூறும் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் குறித்து விமர்சனம் செய்யவில்லை.
 
தங்களுடைய கட்சியின் எம்எல்ஏக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் மற்ற கட்சிகளை குறை கூறுவது சரியா என்பது நெட்டிசன்கள் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இதுகுறித்து தனது ஆவேசமான கருத்தை தெரிவித்துள்ளார் 
 
பாரதிய ஜனதா கட்சியை புதுச்சேரி ஜன படுகொலையை அரங்கேற்றி உள்ளது என்றும் வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சொந்த கட்சி எம்எல்ஏக்கள் காலை வாரி ராஜினாமா செய்ததை இதுவரை எந்த அரசியல் தலைவரும் கண்டிக்கவில்லை, ஆனால் பாஜகவை மட்டுமே தொடர்ந்து குறைகூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது