வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 9 ஜூலை 2014 (13:38 IST)

வைகோவுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தீடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டார். 
 
இதையடுத்து இரவு 11 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு 4 ஆவது மாடியில் உள்ள வார்டில் தங்கி உள்ளார். 
 
வயிற்றுக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 
 
வயிறு சம்பந்தப்பட்ட சில பரிசோதனைகள் வைகோவுக்கு மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.