திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (09:08 IST)

25 லட்சம் டார்கெட்: 4வது வார மெகா தடுப்பூசி முகாம்!

இன்று நடைபெறும் மெகா முகாம்களில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றும் மெகா தடுப்பூசி முகாம் துவங்கி  நடைபெற்று வருகிறது. 
 
4 வது முகாமான இன்று 20,000 இடங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் மெகா முகாம்களில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.